ஹைதராபாத் திரும்பினார் ராஜமவுலி: மகேஷ்பாபு பட வேலைகள் தொடக்கம்!

ஹைதராபாத் திரும்பினார் ராஜமவுலி: மகேஷ்பாபு பட வேலைகள் தொடக்கம்!

குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்த ராஜமவுலி, ஹைதராபாத் திரும்பியுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட் உள்பட பலர் நடிப்பில் உருவான படம், ‘ ஆர்ஆர்ஆர்’. மார்ச் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியானது. கரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு வெளியான முதல் பெரிய பட்ஜெட் படம் இது.

ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே இந்தப் படம் வசூலைக் குவித்து வந்தது. உலகம் முழுவது ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து புதிய சாதனைப் படைத்தது.

இந்நிலையில், ஓய்வுக்காக குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்த இயக்குநர் ராஜமவுலி, ஹைதராபாத் திரும்பியுள்ளார். அவர் அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். SSMB 29 என்று அழைக்கப்படும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. அடுத்த வருடம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in