அதிர்ச்சி...பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்

விஜய்யுடன் இயக்குநர் சித்திக்.
விஜய்யுடன் இயக்குநர் சித்திக்.

நடிகர் விஜய் நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்', 'காவலன்' படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக் காலமானார்.

பிரபல மலையாள இயக்குநர் சித்திக். இவர் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார்.

தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நேசமணி கேரக்டர் பிரபலமானது. இப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலம். பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலமாகி விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in