இயக்குநர் ஷங்கர் பிறந்த நாள்: ‘கேம் சேஞ்சர்’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

இயக்குநர் ஷங்கர்...
இயக்குநர் ஷங்கர்...

இயக்குநர் ஷங்கர் இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில் ‘கேம் சேஞ்சர்’ படக்குழு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எனக் கொண்டாடப்பட்டு வரும் ஷங்கர் இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினருடன், இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நடிகர் கமலுடனான ‘இந்தியன்2’ படப்பிடிப்பை முடித்துள்ள ஷங்கர், தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த கொண்டாட்டத்தின் போது நடிகர் ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் படக்குழுவினர் ஆகியோருர் உடனிருந்தனர். படங்களின் பிரம்மாண்டங்களுக்குப் பெயர் போன இயக்குநர் ஷங்கர் சமீபத்தில், திரையுலகில் தனது 30 வருடங்களை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’ஜெண்டில்மேன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவருக்கு நடிகராக வேண்டும் என்பது தான் தீராத விருப்பமாக இருந்தது. இயக்குநராவதற்கு முன்பு ’வசந்தராகம்’, ‘சீதா’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். ’ஜீன்ஸ்’, ‘அந்நியன்’, ‘இந்தியன்’, ‘நண்பன்’, ‘எந்திரன்’, ‘முதல்வன்’, ‘2.0’ என வெற்றிக் களம் கண்ட ஷங்கர் ‘கேம் சேஞ்சர்’ படம் மூலம் தெலுங்கில் தடம் பதிக்க இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in