பாலிவுட் ஹீரோ நடிப்பில் சயின்ஸ் பிக்சன் படம் இயக்குகிறார் ஷங்கர்?

பாலிவுட் ஹீரோ நடிப்பில் சயின்ஸ் பிக்சன் படம் இயக்குகிறார் ஷங்கர்?

பிரபல பாலிவுட் ஹீரோ நடிப்பில் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராம் சரண் நாயகனாக நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இதற்கு தற்காலிகமாக, 'RC15' என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.

இதற்கிடையே இயக்குநர் ஷங்கர், பாலிவுட் ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் சயின்ஸ் பிக்சன் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மெகா பட்ஜெட் படமான இதில் ராம் சரணும் இன்னொரு ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.

ஹிர்த்திக் ரோஷன்
ஹிர்த்திக் ரோஷன்

ராம் சரண் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு , கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தைத் தொடர இருக்கிறார் ஷங்கர். இதையடுத்து ’அந்நியன்’ இந்தி ரீமேக்கையும் இயக்க இருக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு இந்த சயின்ஸ் பிக்சன் கதையை அவர் படமாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது 'டாகோன்' (Dagon), 'அண்டர்வாட்டர்' (Underwater), 'பிலோ' (Below), 'ஸ்பேர்' (Sphere) ஆகிய திரைப்படங்களைப் போல அன்டர்வாட்டர் சயின்ஸ் பிக்சன் (underwater sci-fi film) படம் என்றும், பட்ஜெட் மிக மிக அதிகம் என்றும் அதாவது ஆயிரம் கோடி என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in