`பெரியப்பா' அனுபவம்: `கே.ஜி.எஃப் 2’ குழுவைப் பாராட்டும் இயக்குநர் ஷங்கர்

`பெரியப்பா' அனுபவம்: `கே.ஜி.எஃப் 2’ குழுவைப் பாராட்டும் இயக்குநர் ஷங்கர்

கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை சமீபத்தில் பார்த்துள்ள பிரம் மாண்ட இயக்குநர் ஷங்கர் அந்தப் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர், இப்போது ராம் சரண் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். மற்றும் அஞ்சலி, சுனில், ஜெயராம் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்ததால், கடந்த மாதம் வெளியான ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தை அவர் உடனடியாகப் பார்க்கவில்லை.

யாஷ், பிரசாந்த் நீல்
யாஷ், பிரசாந்த் நீல்

இப்போது இந்தப் படத்தை பார்த்த அவர் படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடைசியாக, கே.ஜி.எஃப் 2 படத்தைப் பார்த்துவிட்டேன். கதை சொல்லல், திரைக்கதை, எடிட்டிங் அனைத்திலும் நவீனமுறை கையாளப்பட்டிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இன்டர்கட் ஷாட்டை கையாண்டிருப்பது துணிச்சல் முடிவு. யாஷுக்காக மாஸ் காட்சிக்கான நடைமுறையை மாற்றி எடுத்திருக்கிறீர்கள். ‘பெரியப்பா’ அனுபவத்தை கொடுத்த இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு நன்றி. அன்பறிவின் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டல். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in