தைவானில் ’இந்தியன் 2’; இயக்குனர் ஷங்கர் உற்சாகம்!

இயக்குனர் ஷங்கர்
இயக்குனர் ஷங்கர்’இந்தியன் 2’ ட்விட்டரில் அப்டேட் கொடுத்த இயக்குனர் சங்கர்!

’இந்தியன் 2’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தைவான் நாட்டில் தொடங்கி உள்ளதை இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

’விக்ரம்’ படத்தினைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனின் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்றது. இதனை முடித்துவிட்டு வெளிநாடு செல்ல உள்ளதாக இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன்படி தைவான் நாட்டில் அடுத்தகட்ட  படப்பிடிப்பு  தொடங்க  உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிசெய்யும் வகையில் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தைவான் படப்பிடிப்பு இடத்தில் ஸ்கிரிப்ட் பேப்பருடன் நிற்கும்  தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிந்துள்ளார். இடையில் தடைபட்டிருந்த இந்தியன் -2 படப்பிடிப்பு வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த உற்சாகம் இயக்குனர் ஷங்கரிடமும் எதிரொலிக்கிறது. இயக்குனர் சங்கரின் இந்த பதிவை நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள்  வைரலாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in