கே.டி.குஞ்சுமோனுடன் இயக்குநர் ஷங்கர் சந்திப்பு

கே.டி.குஞ்சுமோனுடன் இயக்குநர் ஷங்கர் சந்திப்பு

சினிமா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை பிரபல இயக்குநர் ஷங்கர் சந்தித்துப் பேசினார்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்கள் தயாரிப்பதிலும் அதைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவதிலும் புகழ்பெற்றவர் கே.டி.குஞ்சுமோன். சரத்குமார், இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை உருவாக்கிய பெருமை அவரை சேரும். வசந்தகால பறவை, சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் உட்பட பல படங்களை தயாரித்த அவர், என்றென்றும் காதல் என்ற படத்தை கடந்த 1999-ம் ஆண்டு தயாரித்தார். பிறகு படங்கள் தயாரிக்கவில்லை. இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பில் மீண்டும் இறங்கியுள்ளார் குஞ்சுமோன். `ஜென்டில்மேன் 2’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை அவர் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை இயக்குநர் ஷங்கரும், அவரது மனைவியும் சந்தித்துப் பேசியுள்ளன‌ர். அப்போது, அவர்களுக்கு குஞ்சுமோன் ஆசி வழங்கினார். மேலும், தங்கள் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும்படி குஞ்சுமோனுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

Related Stories

No stories found.