'இந்தியன் 2' புதிய புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்: நடிகர் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படம்
ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படம்
Updated on
1 min read

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன்-2'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டது.

இதில் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷங்கரும், மற்ற கேரக்டர்களின் படப்பிடிப்பை 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன் மற்றும் வசந்தபாலன் உள்ளிட்டோர் இயக்கினர். படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துள்ள நிலையில், இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் 'இந்தியன்-2' படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் 'எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன்' என்று தொடங்கும் அறிமுக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கமலுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் ஷங்கர், புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், நமது உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சேனாபதியை மீண்டும் திரைக்கு அழைத்து வர உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை! நீங்கள் தொடர்ந்து எங்களை மகிழ்விப்பீர்கள், மேலும் லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in