நெஞ்சம் உடைந்து சிதறியது... இந்திய அணி தோல்வியால் கதறியழுத பிரபல இயக்குநர்!

உலகக்கோப்பை கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தான் கதறி அழுததாக இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி 240 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதனை எளிதாக சேஸிங் செய்த ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டிருக்கிறது. இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் தொடர்ந்து 10 போட்டிகளில் அசத்திய இந்திய அணி கடைசியாக வெற்றி பெற வேண்டிய இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்திய அணி தோற்றதிற்கு காரணம் ஆடுகளம் மோசமான முறையில் அமைக்கப்பட்டது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அணியின் தோல்விக்காக கதறி அழுததாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, ‘நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது’ எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in