இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா

இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா

தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்குத் தொற்று உறுதியாகி இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ட்விட்டரில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், “எனக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2, 3 நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தயவு செய்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள். விழிப்புடன் இருங்கள். தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in