‘லால் சலாம்’ திரைப்படத்தில் செல்வராகவன்?

செல்வராகவன் - ஐஸ்வர்யா
செல்வராகவன் - ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில், இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் ’லால் சலாம்’. இதில் கவுரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரதான கதாபாத்திரங்களில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

குடும்ப உறவுக்கு அப்பாலும் இயக்குநர் செல்வராகவனுக்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்க்கையில் முக்கிய இடம் உண்டு. செல்வராகவனின் உதவியாளராக பயின்றதன் அடிப்படையில், திரைப்படங்களை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. தற்போது தான் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் செல்வராகவன் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா கலந்து வருகிறார். அதிகாரபூர்வமான அறிவிப்பு மட்டுமே இதனை உறுதி செய்யும் என்ற போதும், ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

இயக்குநர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் ஜொலித்து வருக்கிறார். பீஸ்ட், சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் தோன்றிய அவர், தற்போது வெளியாகி இருக்கும் பகாசூரன் திரைப்படத்திலும் வரவேற்பு பெற்றிருக்கிறார். அண்மையில் செல்வராகவன் பிறந்தநாளுக்கு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அந்த புகைப்படத்தை ’எனது குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து’ என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in