வருடங்கள் ஆனாலும் பழசை மறக்காத நயன்தாரா!

வருடங்கள் ஆனாலும் பழசை மறக்காத நயன்தாரா!

வருடங்கள் ஆகிவிட்டாலும் பழசை மறக்காத நயன்தாராவை, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அதுபற்றி இருவரும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.

இந்நிலையில், இவர்கள் திருமணம் நேற்று காலை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கோலாகலமாக நடந்தது. நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இந்தத் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நயன்தாரா, சத்யன் அந்திக்காடு
நயன்தாரா, சத்யன் அந்திக்காடு

இந்த திருமணத்துக்கு பல முக்கிய நடிகர், நடிகைகளை அழைக்கவில்லை என்றாலும் மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடுக்கு அழைப்பு விடுத்திருந்தார் நயன்தாரா. இவர்தான், டயானா மரியம் குரியன் என்பவரை, நயன்தாரா என்று ஆக்கியவர். 2003-ம் ஆண்டு அவர் இயக்கிய ’மனசினக்கரே’ படம் மூலம்தான் நயன்தாரா அறிமுகமானார்.

அழைப்பை ஏற்று மாமல்லபுரம் வந்திருந்த இயக்குநர் சத்யன் அந்திகாடு, மணமக்களை நேரில் வாழ்த்தினார். பழசை மறக்காமல், தன்னை அறிமுகப்படுத்தியவரை திருமணத்துக்கு அழைத்த நயன்தாராவை, மலையாள ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in