ரஜினி, அனிருத்துக்கு கார்... ஆனால், எனக்கு நஷ்டம்! புலம்பும் ‘ஜெயிலர்’ பட இயக்குநர்!

'ஜெயிலர்'  ரஜினிகாந்த்
'ஜெயிலர்' ரஜினிகாந்த்

’ஜெயிலர்’ படக்குழுவினருக்கு செக், கார் கொடுத்ததற்காக ‘ஜெயிலர்’ பட இயக்குநர் புலம்பியுள்ளார்.

தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் இந்தப் படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்ததோடு, செக்கையும் ஒப்படைத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

'ஜெயிலர்’  vs ‘ஜெயிலர்’
'ஜெயிலர்’ vs ‘ஜெயிலர்’
’ஜெயிலர்’ இயக்குநரின் பதிவு...
’ஜெயிலர்’ இயக்குநரின் பதிவு...

இந்நிலையில், மலையாள ’ஜெயிலர்’ பட இயக்குநர் ஸகிர் அவரது முகநூல் பக்கத்தில், ‘’ஜெயிலர்’ மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியில் ரஜினிக்கு ஒரு பங்கை ரொக்கமாகவும் விலையுயர்ந்த காராகவும் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. இது ரஜினி ரசிகனாக எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், மலையாள திரைப்படமான ’ஜெயில’ரின் தயாரிப்பாளராக நான் இன்று கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறேன். அவர்கள் காணாமல் போனதில் எனக்கு ஏமாற்றம் தான். முதலில் ’ஜெயிலர்’ என்ற பெயரைப் பதிவு செய்ததற்காக நான் பூமியில் இருந்து துடைக்கப்படப் போவதை அவர்களும் பார்க்கட்டும்!’ எனப் புலம்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in