ஆண்ட்ரியா படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் கண்ணன்

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரிக்கிறார்.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் உட்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர், தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை ரீமேக் செய்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, பிரியா ஆனந்த் நடிக்கும் ’காசேதான் கடவுளடா’ படத்தை இயக்கியுள்ளார்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

சமீபத்தில், போகஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரித்து இயக்குகிறார். அதில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்சன் கதையை கொண்ட இந்தப் படத்தில் ஹன்சிகா, விஞ்ஞானியாக வருகிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

இதற்கிடையே, நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம் ஒன்றை அவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். கதாசிரியர் ஆர்.செல்வராஜ் மகனான இவர், இதற்கு முன் கத்திக்கப்பல், துப்பாக்கி முனை, `நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' படங்களை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in