இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு: ஆட்டோவில் வந்து கல் எறிந்தவர் யார்?

இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு: ஆட்டோவில் வந்து கல் எறிந்தவர் யார்?

சென்னையில் திரைப்படஇயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை உடைத்த மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருபவர் இயக்குநர் ஆர்.கே செல்வமணி. இவரிடம் கடந்த 8 ஆண்டுகளாக சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி வேலை நிமிரத்தமாக சென்ற ஆர்.கே செல்வமணியை ஒரு இடத்தில் இறக்கிவிட்டு, பின்னர் வழக்கம் போல் பாலமுருகன் சாலிகிராமம் அபுசாலி தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு காரை நிறுத்தி உள்ளார்.

நேற்று காலை பாலமுருகன் மீண்டும் காரை எடுக்க வந்த போது காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லால் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு சென்றது பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிசிடிவி ஆதாரங்களுடன் பாலமுருகன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in