`தங்கலான்’ ரிலீஸ் எப்போது?- இயக்குநர் இரஞ்சித் பதில்

‘தங்கலான்’
‘தங்கலான்’ `தங்கலான்’ ரிலீஸ் எப்போது?- இயக்குநர் இரஞ்சித் பதில்

’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை அடுத்து இயக்குநர் இரஞ்சித்தின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய ‘தங்கலான்’ படம் எப்போது வெளியாக இருக்கிறது என்பது குறித்து இயக்குநர் இரஞ்சித் பேசியுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. இதன் படப்பிடிப்பு மற்றும் வெளியாவது எப்போது என்பது குறித்து இயக்குநர் இரஞ்சித் பேசியுள்ளார். இயக்குநர் இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘வானம் கலைத் திருவிழா’வில் அவர் பேசியிருப்பதாவது, `தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 80% நிறைவடைந்துவிட்டது. கோலார் தங்க சுரங்கத்தில் 55 நாட்கள் படப்பிடிப்பு செய்தோம். இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. இந்த மே மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிடும். கோலார் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவது எளிதானது கிடையாது. படத்தில் VFX வேலைகள் நிறைய இருக்கிறது. சுவாரஸ்யமான அதேசமயம் மக்களுக்குப் பிடித்த திரைப்படமாகவும் இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் `தங்கலான்' வெளியாகும்.

மேலும், கமல் சார் படத்திற்கும், `சார்பட்டா பரம்பரை2' திரைக்கதை பணிகளும் உள்ளது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இருப்பாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” எனப் பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in