இயக்குநர் ராமுடன் நிவின் பாலி இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு!

இயக்குநர் ராமுடன் நிவின் பாலி இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு!

இயக்குநர் ராமுடன் நடிகர் நிவின் பாலி இணையும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ராம் மற்றும் நிவின்பாலி இருவரும் தங்களின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இதனையொட்டி இப்படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெயர் அறிவிப்புக்காக வெளியான வீடியோவில், சிலைகள் உருவத்தில் கதாப்பாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் பெயர் ‘ ஏழு கடல் ஏழு மலை’ என அறிவிக்கப்பட்டுள்ளது. படத் தலைப்பின் வீடியோவின் இறுதியில், “ காதல் வந்தால் மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்” என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.

நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மதி வி.எஸ் எடிட்டராக பணிபுரிகிறார், ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஸன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in