
இயக்குநர் ராஜமெளலி, நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்துள்ள அடுத்த படத்தில் தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளரை மாற்றியுள்ளார்.
இந்த வருடம் ஆஸ்கர் விழாவில் பல விருதுகளை அள்ளிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கும் அடுத்தப் படம் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அந்த வகையில், மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். அனுமனின் குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரம் ஒன்றில் மகேஷ்பாபு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆக்ஷன் அட்வென்சர் படமாக இது உருவாக இருக்கிறது என்பதையும் ராஜமெளலி உறுதிப்படுத்தியுள்ளார். வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கக்கூடிய இந்தப் படத்தில் தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரை மாற்றிவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜமெளலியும் கே.கே.செந்தில்குமாரும் இணைந்து ‘சை’, ’சத்ரபதி’, ’மகதீரா’, ’நான் ஈ’, ’பாகுபலி’, ’பாகுபலி 2’, ’ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!