வேட்டையனைக் காதலித்த ரஜினிகாந்த்தின் மனைவி... உண்மையை உடைத்த இயக்குநர்!

ரஜினிகாந்த், லதா
ரஜினிகாந்த், லதா

வேட்டையன் கதாபாத்திரத்தை லதா ரஜினிகாந்த் காதலித்ததாக இயக்குநர் பி.வாசு தெரிவித்து இருக்கிறார்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி2’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் பி.வாசு கூறுகையில், “மலையாளத்தில் வெளியான ’மணிசித்திரதாழு’ படத்தைப் பார்த்தப் பிறகு என்னுடைய நாலு வயசுப் பொண்ணு அபிராமி மனதில் அந்த கேரக்டர் பதிந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. இதுதான் ’சந்திரமுகி’ படம் நான் ஆரம்பிப்பதற்கு காரணம்.

நடிகை கங்கனா
நடிகை கங்கனா’சந்திரமுகி2’ ஸ்வாகந்தாஞ்சலி பாடலில்...

பிறகு, ‘சந்திரமுகி’ படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஒருநாள் லதா ரஜினிகாந்த் போன் பண்ணாங்க. என்னிடம் நான் எவ்வளவோ படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘வேட்டையனை பார்த்தால் லவ் பண்ணனும் போல ஃபீலிங் இருக்குது. அந்த கேரக்டரை பெரிதாக பண்ணுங்க’ என கேட்டார். நானும் மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்டேன். ஆனால் ’சந்திரமுகி 2’ படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி என சொல்ல முடியாது. இதில் வடிவேலு தவிர ரஜினி, பிரபு கதாபாத்திரங்கள் யாருமே இல்லை’ என தெரிவித்துள்ளார் பி.வாசு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in