பத்திரிகையாளரை மணக்கும் கார்த்தி பட இயக்குநர்: வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

பத்திரிகையாளரை மணக்கும் கார்த்தி பட இயக்குநர்: வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

நடிகர் கார்த்தி படத்தை இயக்கும் இயக்குநருக்கும் சினிமா பத்திரிகையாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்த ’இரும்புத்திரை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இந்த படம் கவனிக்கப்பட்டதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த’ஹீரோ’ படத்தை இயக்கினார். இதையடுத்து கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தை அவர் இயக்கி வருகிறார். இதில் ராஷிகண்ணா, சிம்ரன், இந்தி நடிகர் சங்கி பாண்டே, லைலா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷமீரா ஐயப்பன் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 'மேயாதமான்', 'ஆடை' படங்களின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பி.எஸ்.மித்ரனின் நிச்சயதார்த்தை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து திரையுலகினர் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in