நான் என்றுமே விஜய் விசுவாசி தான்... இயக்குநர் பேரரசு பளிச்!

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு

என்றுமே நான் நடிகர் விஜயின் விசுவாசி தான் என இயக்குநர் பேரரசு ‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில் பேசியுள்ளார். விஜயை வைத்து இவர் ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில்
‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில்

‘நினைவெல்லாம் நீயடா’ பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, “இங்கே சரியான தலைவர்கள் நிறையப் பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜயின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

நம்மை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1,417வது படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைகிறோம்.

இளையராஜா- பவதாரிணி...
இளையராஜா- பவதாரிணி...

இன்று அவர் வீட்டில் துக்கம். ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். இந்தப் படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது.

காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in