திரைப்பட விழாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கைது

திரைப்பட விழாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கைது

திரைப்பட விழாவில், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் பால் ஹக்கிஸ் (69). கனடாவை சேர்ந்த இவர் ’கிராஷ்’ என்ற படத்தில் சிறப்பான திரைக்கதை அமைத்திருந்ததற்காக, ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இத்தாலியில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அங்கு சென்றார்.

புக்லியா என்ற சுற்றுலா நகரத்தில் உள்ள ஒஸ்துனியில் அவர் தங்கி இருந்தார். அங்கு இளம் வெளிநாட்டுப் பெண்ணை அவர் கட்டாயப்படுத்தி இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து இத்தாலி போலீஸார் பால் ஹக்கீன்ஸை கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். ஆனால், ’இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ என்று பால் ஹக்கிஸ் மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in