'இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்': ஓடிடியில் வெளியான தனது படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் ட்விட்

'இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்': ஓடிடியில் வெளியான தனது படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் ட்விட்

'இரவின் நிழல்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது குறித்து இயக்குநர் பார்த்திபன் ட்விட் செய்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஆதரவான கருத்துகள் வெளியானது. மேலும் இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட 13 படங்களில் 'இரவின் நிழல்' படமும் ஒன்று என்ற சிறப்பையும் பெற்றது.

விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெற்றது. 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், 'இரவின் நிழல்’ திரைப்படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,” மகிழ்ச்சியை கூட…அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்! please நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள் (single shot) ஆதரவை தர வேண்டுகிறேன், நன்றியுடன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in