சிறைவாசிகளுக்காக மடிப்பிச்சை ஏந்திய இயக்குநர் பார்த்திபன்: வைரலாகும் வீடியோ

சிறைவாசிகளுக்காக மடிப்பிச்சை ஏந்திய இயக்குநர் பார்த்திபன்: வைரலாகும் வீடியோ

சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று மடிப்பிச்சையாய் புத்தகம் கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் புத்தகக் கண்காட்சி கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஆயிரம் அரங்கில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் முன்னணி எழுத்தாளர்கள் அரங்கில் அமர்ந்து புத்தகங்களில் கையெழுத்திட்டு வாசகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு அரங்கிலும் சென்று துண்டை நீட்டி மடிப்பிச்சை கேட்டு புத்தகங்களைப் பெற்றார். சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி அவர் ஒவ்வொரு அரங்காக சென்று மடிபிச்சை கேட்டுப் புத்தகங்களை தானமாக பெற்றார். அந்த புத்தகங்களை கூண்டு வானம் அரங்கில் சேர்த்தார்.

இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பார்த்திபன், " மடிப்பிச்சை ஏந்தி சிறைக்கைதிகளுக்கு 1000 புத்தகங்களைத் திரட்டியது மகிழ்ச்சி" என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் பார்த்திபனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in