
’துணிவு’ பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் சபரிமலைக்கு சென்றுள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்த ‘துணிவு’ படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகி இருக்கிறது.
இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தற்போது சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றுள்ளார்.
இந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சபரிமலை பாதயாத்திரை முடிந்து அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் கிழமையில் வினோத் சென்னை திரும்புவார் எனவும் சொல்லப்படுகிறது. ‘துணிவு’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷூடன் ஹெச். வினோத் இணைய இருக்கிறார். அதேபோல, நடிகர் அஜித் அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.