60% ஆக்‌ஷன், 40% காமெடி, இதுதான் பீஸ்ட்!

60% ஆக்‌ஷன், 40% காமெடி, இதுதான் பீஸ்ட்!

`பீஸ்ட்' படத்தில் 60 சதவீதம் ஆக்‌ஷன், 40 சதவீதம் காமெடி இருக்கும் என்று இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூறினார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம், பீஸ்ட். விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூறுகையில், ``விஜய்யை மனதில் வைத்து இந்தப் படத்தின் கேரக்டரை உருவாக்கினேன். அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என்று திரைக்கதை அமைத்தோம். விஜய் படங்களில் அதிகமான பாட்டுகள் இருக்கும். இதில் குறைவாக வைத்திருக்கிறோம்.

நெல்சன் திலீப்குமார்
நெல்சன் திலீப்குமார்

படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு ஹாலிவுட் படம் போல் இருப்பதாக சொன்னார்கள். இதை இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம் என்று சொல்லலாம். விஜய்யின் ஆக்‌ஷனும், ஸ்டைலும் அந்த அளவுக்கு இருக்கும். விஜய் இயல்பில் எப்படி இருப்பாரோ அதையே படத்திலும் பயன்படுத்தியிருக்கிறேன். 60 சதவீதம் ஆக்‌ஷன் 40 சதவீதம் காமெடி படத்தில் இருக்கும்.

மக்கள் நெருக்கடி மிகுந்த ஷாப்பிங் மாலில் நடக்கும் கடத்தல் கதை. விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவை கொண்டு மக்கள் நடமாட்டமிக்க ஷாப்பிங் மாலில் படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என்பதால், ஷாப்பிங் மால் செட் ஒன்றை உருவாக்கினோம். நிஜமான மால் போலவே அது அமைக்கப்பட்டது. கண்டிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in