உன்னை இயற்கை பார்த்துக் கொள்ளும்- ‘கடைசி விவசாயி’ மணிகண்டனை பாராட்டிய மிஷ்கின்!

மணிகண்டனை பாராட்டிய மிஷ்கின்
மணிகண்டனை பாராட்டிய மிஷ்கின்

`கடைசி விவசாயி' படத்தின் இயக்குநர் மணிகண்டனை அவரது சொந்த ஊரில் சந்தித்த இயக்குநர் மிஷ்கின், "உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `கடைசி விவசாயி'. இந்த படம் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனிடையே, மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றுள்ளார் இயக்குநர் மிஷ்கின். அவரை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் மிஷ்கின்.

அதில், "கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன்.

படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in