பிரபுதேவாவின் ‘ரேக்ளா’வைத் தொடங்கி வைத்த மிஷ்கின்

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’வைத் தொடங்கி வைத்த மிஷ்கின்

பிரபுதேவா நடிக்கும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் 'ரேக்ளா'. இதில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். இதை 'வால்டர்' இயக்குநர் அன்பு இயக்குகிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ரேக்ளா தொடக்க விழாவில், ஜிப்ரான், பிரபுதேவா, அன்பு, அம்பேத்குமார், மிஷ்கின், கதிரேசன்
ரேக்ளா தொடக்க விழாவில், ஜிப்ரான், பிரபுதேவா, அன்பு, அம்பேத்குமார், மிஷ்கின், கதிரேசன்

பிரபுதேவா நடிக்கும் 58-வது படமான 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில், தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி.வி.குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரபுதேவா நடிப்பில், கன்னடத்தில் லக்கிமேன், தமிழில் பஹீரா, ஊமை விழிகள், பிளாஷ்பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in