ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகளை நீக்கினேனா?- மிஷ்கின் விளக்கம்

ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகளை நீக்கினேனா?- மிஷ்கின் விளக்கம்

‘பிசாசு2’ படத்தில் இருந்து நடிகை ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகளை நீக்கியதாக வந்த செய்தி குறித்து இயக்குநர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார்.

’சித்திரம் பேசுதடி’ படம் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். ’அஞ்சாதே’, ‘நந்தலாலா’, ‘சைகோ’ என பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரின் இயக்கத்தில் ‘பிசாசு2’ அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

‘பிசாசு2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா சில காட்சிகள் நிர்வாணமாக நடித்திருப்பதாகவும் பிறகு அந்த காட்சிகள் படத்தில் இருந்து இயக்குநர் மிஷ்கின் நீக்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இது தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் விளக்கம் கொடுத்துள்ளார். ``நிர்வாண காட்சிகளில் நடிப்பதற்காக ஆண்ட்ரியா அதிக சம்பளம் கேட்டது உண்மை தான். இது வழக்கமாக நடப்பது தான். ஆனால், படத்தில் நிர்வாண காட்சிகள் வைக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின்பு எனக்கு ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பர் புகைப்படக்காரர் சுந்தர், என்னுடைய உதவி பெண் இயக்குநர் என இருவர் மட்டும் இருக்கும்படி ஆண்ட்ரியாவை நிர்வாண புகைப்படங்கள் எடுத்தார்கள். ‘பிசாசு2’ படம் குழந்தைகளும் பார்க்க வேண்டும் என விரும்பினேன்.

இது போன்ற காட்சிகளை வைத்தால் நிச்சயம் சென்சாரில் ‘ஏ’ சர்டிஃபிகேட் தருவார்கள். அதனால், அந்த காட்சிகளை வைக்க வேண்டாம் என முடிவு செய்து அந்த புகைப்படங்களை டெலிட் செய்து விடும்படி சுந்தரிடம் சொன்னேன். தவிர, அந்த புகைப்படங்களை நான் பார்க்க கூட இல்லை!’ என இயக்குநர் மிஷ்கின் விளக்கம் கொடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in