மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதில்லை: பிரபல இயக்குநர் திடீர் அறிவிப்பு!

இயக்குநர் மோகன்.ஜி
இயக்குநர் மோகன்.ஜி

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தான் போட்டியிடுவது தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என திரைப்பட இயக்குநர் மோகன். ஜி தெரிவித்துள்ளார்.

'திரெளபதி', 'பழைய வண்ணாரப்பேட்டை', 'ருத்ர தாண்டவம்', 'பகாசூரன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன். ஜி. இவரது இயக்கத்தில் வந்த திரைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சாதிய அடையாளங்களை தாங்கியிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. பாஜகவின் இந்துத்துவா மற்றும் பாமகவின் அரசியல் குறித்து தொடர்ந்து ஆதரித்து மோகன் ஜி கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இயக்குநர் மோகன்.ஜி
இயக்குநர் மோகன்.ஜி

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மோகன்.ஜி போட்டியிடுவார் என சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள மோகன், தான் பாஜக சார்பில் போட்டியிடப் போவதில்லை என விளக்கமளித்துள்ளார். அவ்வாறு வெளியான தகவல் தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சி

தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் பாமகவில் உள்ளனர் எனவும், தன்னுடைய படங்களை பாஜகவினர் கொண்டாடுகிறார்கள் என்பதற்காகவே தான் பாஜக ஆதரவாளர் என்று அர்த்தம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் குறித்து தனக்கு எந்த ஐடியாவும் கிடையாது எனவும் மோகன். ஜி விளக்கமளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in