வடிவேலுவை சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ்

வடிவேலுவை சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ்
வடிவேலுவை சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ்

தனது படமான `மாமன்னன்' படத்தில் நடிக்க உள்ள வடிவேலுவை இயக்குநர் மாரி செல்வராஜ் சந்தித்து பேசியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் ’மாமன்னன்’ இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய ரோலில் பகத் பாசில் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலுவும் நடிக்க உள்ளார். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் படத்திலும் வடிவேல் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டும் என்று உதயநிதிதான் கூறினாராம். இதனிடையே, இயக்குநர் மாரி செல்வராஜ், வடிவேலுவை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in