உதயநிதியின் ’மாமன்னன்’: அப்டேட் வெளியிட்ட மாரி செல்வராஜ்!

மாரிசெல்வராஜ்
மாரிசெல்வராஜ்

’மாமன்னன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை அடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம், ’மாமன்னன்’. இதில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் ஃபாசில், வடிவேலு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக சேலம் அருகே நடந்து வந்தது. இதில் உதயநிதி, வடிவேலு பங்கேற்றக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததுவிட்டது. இதை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in