18 வருஷ போராட்டம்... மேடையில் நெகிழ்ந்த பாரதிராஜா மகன்!

மார்கழி திங்கள்’
மார்கழி திங்கள்’

இயக்குநராக வேண்டும் என்பது தன்னுடைய 18 வருட கனவு என பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா பேசியுள்ளார்.

சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் தொடக்க விழாவில் மனோஜ் பாரதிராஜா, “18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குந‌ராக வந்திருக்கிறேன். இயக்குநராக வேண்டும் என்பது என் கனவாக இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக நடிகனாக வந்தேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைகளைச் சொல்லியிருந்தேன்.

மார்கழி திங்கள்’
மார்கழி திங்கள்’

திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு 'நீங்க படம் பண்ணுங்க' என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி” என நெகிழ்ச்சியாகப் பேசினார். இயக்குநர்கள் சீமான், லிங்குசாமி, நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in