இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம்

நன்றி சொன்ன இயக்குநர் மணிரத்னத்துக்கு நகைச்சுவையுடன் பதில் அளித்த நடிகர் பார்த்திபன்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் திரையரங்குகளில் இன்று ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் வெளியானதை முன்னிட்டு இதில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் சோழமண்டர்கள் ஆண்ட தஞ்சாவூருக்கே இன்று சென்றுள்ளார். அங்குள்ள ராஜராஜ சோழன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தஞ்சை பெரிய கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார் நடிகர் பார்த்திபன். இதற்கு இயக்குநர் மணிரத்னம், நடிகர் பார்த்திபனுக்கு நன்றி சொல்லியுள்ளார்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் `பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த நாவலை அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். இந்நாவல் அவர் தொடங்கி நடத்திய கல்கி இதழில் வெளியானது.

`பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் பார்த்திபனும் நடித்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் படம் இன்று ரிலீஸாகும் நிலையில், தஞ்சையில் சுற்றிவந்தார். இந்நிலையில் சற்றுமுன் பார்த்திபன் தன் முகநூல் பக்கத்தில் தன் செல்போனின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது இயக்குநர் மணி ரத்னம் அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தி ஆகும். அதில், “நீங்கள் இந்தப்படத்தின் ஒரு அங்கமாக இருந்ததற்கு நன்றி. இன்று தஞ்சாவூர் சென்றதற்கும் நன்றி”என அதில் கூறப்பட்டுள்ளது.

இதை தன் முகநூலில் பார்த்திருக்கும் பார்த்திபன் தன் ஸ்டைலிலேயே, “2 வரிகள் பேசவே 98 சதவீதம் ஜி.எஸ்.டி வரிபோடும் மனிதரிடம் இருந்து 5.2 வரிகள் பாராட்டு_பாரே சீழ்க்கை அடிப்பதுபோலுள்ளது” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in