தடையை மீறி லியோ படத்தில் சின்மயிக்கு கிடைத்த வாய்ப்பு... காரணம் இதுதான்!

பின்னணி பாடகி சின்மயி
பின்னணி பாடகி சின்மயி

’லியோ’ திரைப்படத்தில் பாடகி சின்மயி நடிகை த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தில் நடிகை த்ரிஷாவுக்குப் பின்னணி பாடகி சின்மயி டப்பிங் செய்துள்ளார். 'மீ டூ’ விவகாரத்தில் இரண்டு பெண்களுக்கு ஆதரவாகவும் நடிகர் ராதாரவிக்கு எதிராகவும் சின்மயி குரல் கொடுத்ததால் அவரை 2018ம் ஆண்டு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இதனால், கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தமிழில் அவருக்கு டப்பிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது நான்கு வருடங்களுக்குப் பிறகு தமிழில் அவர் மீண்டும் வந்துள்ளார்.

இது தன்னுடைய தனிப்பட்ட வெற்றி என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சின்மயி. சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்தது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ’என் படங்களுக்காக நான் ரொமான்ஸ் காட்சிகள் நிறைய எழுதமாட்டேன். ஆனால், 'லியோ' படத்திற்காக கொஞ்சம் நல்லா ரொமான்ஸ் காட்சிகளை எழுதி இருப்பதாக எனக்கே தோன்றியது.

'லியோ’ தொடக்க விழாவில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா...
'லியோ’ தொடக்க விழாவில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா...

அந்த காட்சியில் விஜய், த்ரிஷா இருவருமே சூப்பராக நடித்திருந்தார்கள். அந்த காட்சிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக சின்மயியை டப்பிங் பேச வைக்க முடிவு செய்தேன். அவருக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு என் வேலை முடியணும்.

அதற்காக அவங்களை அழைத்து பேச வைத்தேன். அவர் தன்னுடைய குரலால் த்ரிஷாவின் கேரக்டருக்கு உயிர் கொடுத்துவிட்டார். எல்லா மொழிகளிலும் த்ரிஷாவுக்கு அவர் தான் டப்பிங் பேசி உள்ளார்’ என பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in