'லியோ’; முதல் பத்து நிமிடங்களை தவறவிடாதீர்கள்... லோகேஷ் கனகராஜ் தந்த மாஸ் அப்டேட்!

'லியோ’ திரைப்படத்தில் விஜய்...
'லியோ’ திரைப்படத்தில் விஜய்...

’லியோ’ படத்தின் முதல் பத்து நிமிடங்களைத் தவறவிடாதீர்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ படம் அக்டோபர் 19ல் வெளியாக உள்ளது. இதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிர புரோமோஷனில் இறங்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என திருப்பதி சென்று வந்தார். இந்த நிலையில் லியோ தொடர்பாக பேட்டியளித்திருக்கும் லோகேஷ், “ ‘லியோ’ படத்தின் முதல் பத்து நிமிடங்களைத் தவறவிடாதீர்கள். எப்படியாவது படம் போடுவதற்கு முன்பே தியேட்டருக்குச் சென்று விடுங்கள்; நிச்சயம் ட்ரீட்டாக அமையும்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அந்த பத்து நிமிடத்திற்காக கடந்த ஒரு வருடமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக உழைத்துள்ளோம். பொறுமையாக அமர்ந்து படத்தை என்ஜாய் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். இதில் ஹைனா விலங்கு இருப்பதுபோல விஜய் சண்டை போடும்படியான காட்சிகள் கிராஃபிக்ஸில் உருவாக்கியுள்ளனர்.

ஹைனா இருப்பதுபோல நடிகர் விஜய் கற்பனை செய்து கொண்டு அந்தக் காட்சியில் நடித்துள்ளார் எனவும் படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்துள்ளது எனவும் முன்பு தகவல் வெளியானது. எனவே, அந்தக் காட்சிதான் முதல் பத்து நிமிடங்களாக இருக்க வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in