லியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

’லியோ’ பட சர்ச்சைகளுக்கு அதன் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

’லியோ’ படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாது, ‘லியோ’ படத்தின் டிரெய்லரும் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். முன்பு நடிகர் விஜய்யுடன் லோகேஷ் இணைந்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை முழுக்க தன் பாணியில் உருவாக்காமல் விஜய்க்காகவும் உருவாக்கி இருந்ததாகத் தெரிவித்தார். ஆனால், இந்த ‘லியோ’ திரைப்படம் முழுக்க முழுக்க தன் பாணியில் உருவாகி இருப்பதையும் சமீபத்தில் உறுதி செய்திருந்தார் லோகேஷ்.

இயக்குநர் லோகேஷின் ட்விட்டர் பயோ...
இயக்குநர் லோகேஷின் ட்விட்டர் பயோ...

ஆனால், இதற்கிடையில் படப்பிடிப்பு சமயத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்குநரும், லோகேஷின் நண்பருமான ரத்னகுமார் இயக்கியுள்ளதாக இணையத்தில் செய்தி பரவியது. இதனால் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பயோவில் இருந்து 'லியோ' பட பெயரை நீக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது ட்விட்டர் பயோவில் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தை இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in