'லியோ'கொண்டாட்டத்தில் நடந்த விபத்து... லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

'லியோ' கொண்டாட்டத்தில் தனக்கு சிறு விபத்து ஏற்பட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவில் படம் வெளியான நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜூக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.

மலையாள ரசிகர்கள் 'லியோ' படத்தை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை, பாலக்காட்டில் உள்ள அரோமா திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், இதில் லோகேஷ் கனகராஜும் கலந்து கொண்டார். இதில்தான் அதிக கூட்டம் காரணமாக அவருக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிற நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தத்தைப் பகிர்ந்தவர் விரைவில் கேரளாவுக்கு அதே அன்போடு திரும்ப வருவதாகவும் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in