#Thalaivar171: டைம் டிராவல் படமா இது... விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
Updated on
2 min read

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் வெளியீடு குறித்தான அப்டேட் போஸ்டர் வெளியானது. போஸ்டரைப் பார்த்துவிட்டு பலரும் இது டைம் டிராவல் படமா என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

‘தலைவர் 171’
‘தலைவர் 171’

பிளாக் அண்ட் வொயிட் நிறத்தில் பின்னால் டைம் மெஷின் இருக்க, தங்க நிற வாட்ச்சால் செய்யப்பட்ட கைவிலங்கோடு நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டைட்டில் டீசர் வருகிற ஏப்ரல் 22 அன்று வெளியாகும் என்பதை சொல்வதற்காகதான் அந்த போஸ்டர்.

போஸ்டரில் ரஜினியின் ரெட்ரோ லுக், வாட்ச்சால் கைவிலங்கு இவற்றைப் பார்த்துவிட்டு, ‘’விக்ரம்’ பட ரோலக்ஸின் அப்பாவாக வருகிறாரா ரஜினி? இது டைம் டிராவல் படமா?’ எனப் பல கேள்விகளை ரசிகர்கள் இணையத்தில் எழுப்பி வந்தனர்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

இதற்கெல்லாம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று நடந்த விருது விழா ஒன்றில் பதில் கொடுத்திருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, “’தலைவர் 171’ படத்தில் ரஜினி சாரை நீங்கள் பார்ப்பது போல, இதற்கு முன்பு வேறெதிலும் பார்த்திருக்க மாட்டீர்கள். அதற்கான முயற்சியைதான் இந்தப் படத்தில் செய்திருக்கிறோம். இது 100% லோகேஷ் படமாகதான் உருவாகிறது” என்றார்.

மேலும், படத்தின் கதை டைம் டிராவல் பற்றியதா என கேள்வி எழுப்பப்பட்டபோது, “எல்லோரும் ஒவ்வொரு விஷயம் போஸ்டர் பார்த்து சொல்றாங்க. ஆனால், நாங்க நீங்க யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை எழுதி இருக்கோம்” என்றார். அதுமட்டுமல்லாது, ‘இனிமேல்’ பாடலில் நடித்தது கமல்ஹாசனின் குருபக்திக்காக என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in