லிங்குசாமி படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

லிங்குசாமி படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

லிங்குசாமி இயக்கும் 'தி வாரியர்' படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு ’தி வாரியர்’ என்ற படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். இதில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். நடிகர் ஆதி இதில் வில்லனாக நடிக்கிறார். அக்‌ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர். ஜூலை 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 14-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in