திரையுலகம் அதிர்ச்சி... பிரபல இயக்குநர் மரணம்!

கே.ஜி ஜார்ஜ்
கே.ஜி ஜார்ஜ்

தேசிய விருது பெற்ற இயக்குநரும், மலையாளத் திரையுலகின் பிரபல திரைக்கதை எழுத்தாளருமான கே.ஜி ஜார்ஜ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 77.

கே.ஜி ஜார்ஜ்
கே.ஜி ஜார்ஜ்

கேரளாவில் உள்ள திருவல்லாவில் சாமுவேல், அன்னம்மா தம்பதியரின் மூத்த மகனான ஜார்ஜ், புணே ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் திரைப்பட இயக்கம் படித்தவர். பிரபல இயக்குநர் ராமு கர்யாத்தின் 'மாயா' திரைப்படத்தின் உதவியாளராக திரையுலகில் ஜார்ஜ் அறிமுகமானார்.

1975-ம் ஆண்டு 'ஸ்வப்நதானம்' திரைப்படத்தின் மூலம் கே.ஜி.ஜார்ஜ் பெயர் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

ஜார்ஜ் தனது பல்வேறு படங்களுக்காக 9 கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் நாற்பது வருடங்களில் 19 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

கே.ஜி ஜார்ஜ்
கே.ஜி ஜார்ஜ்

அவரது திரைப்படங்கள் நையாண்டி மற்றும் பெண்ணிய கருத்துகளின் கருப்பொருள்களுக்காக பாராட்டப்பட்டன. ஜார்ஜ் மலையாள சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (MACTA) நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் அதன் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.

கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக கொச்சியில் உள்ள முதியோர் மையத்தில் வசித்து வந்த கே.ஜி.ஜார்ஜ் இன்று காலமானார். அவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in