
கடந்த நான்கு வருடங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பட வெற்றி அதற்கு ஆறுதல் கொடுத்ததாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் பேசியுள்ளார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் பேசியதாவது, “இந்தத் திரைப்படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. அதே சமயம் பதற்றமும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவோடும் இன்று 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மாபெரும் வெற்றி பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சிறப்பாக நடித்திருந்தனர். சட்டானி கதாபாத்திரம் அவ்வளவு சுலபம் இல்லை. அந்த வேடத்தில் நடித்த விது மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார்.
இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்தன. இதன் காட்சிகளை நாங்கள் செதுக்கவில்லை. படத்தில் சொன்னதுபோல, இந்த கதைதான் எங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஒன்றரை வருடத்திற்கு முன்னாள் இந்த கதையை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். இன்று இது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், இயக்குநர்கள் ஷங்கர், நெல்சன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலருக்கு நன்றி. என்னுடைய தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்னை பாராட்டி உள்ளார். 'பேட்ட’ படத்திற்குப் பிறகு என்னுடைய படங்கள் திரையரங்கில் வெளியாகவில்லை. அதுவே எனக்குப் பெரிய மன அழுத்தமாக இருந்தது. இந்தப் படம் நிச்சயம் எனக்கு கம்பேக்காக அமையும் என்று நம்பிக்கை இருந்தது” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!
சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!
பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!
நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!