
விஷாலை வைத்து படம் இயக்கும் இயக்குநர் ஹரி தற்போது திணறிக்கொண்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
’தாமிரபரணி’, ‘சிங்கம்’ போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹரி தற்போது விஷாலுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். ‘விஷால்34’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு நடக்கும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நடிகர் விஷால் பூர்த்தி செய்து வைக்கும் விதமாக தண்ணீர் டேங்க் கட்டிக் கொடுத்தார் விஷால். இதற்கானப் புகைப்படங்களும் வீடியோக்களும் சமீபத்தில் விஷால் தரப்பு வெளியிட்டது.
இதுதவிர அப்பகுதி மக்களுக்கு வேறு என்னென்ன தேவை இருக்கிறது என்பதை கேட்டு இப்போது செய்து கொண்டிருக்கிறாராம். விஷாலுக்கு அரசியல் ஆசை இருப்பதாலும் பப்ளிசிட்டி விரும்பி என்பதாலும்தான் இவ்வாறு செய்து வருகிறார் என்கின்றனர் ரசிகர்கள்.
அரசியலுக்கு நுழையும் ஆர்வத்தில் விஜய் செய்து வரும் நலத்திட்டங்களையே விஷாலும் பின்பற்றுகிறார் என்றும் சொல்கின்றனர். மேலும் விஷால் இவ்வாறு மக்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பு சரியான நேரத்தில் எடுக்க முடியாமல் ஹரி திணறி வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!