பாங்காங்கில் `அஜித் 61' சூட்டிங்: விறுவிறுப்பு காட்டும் படக்குழு

வினோத், அஜித்
வினோத், அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் அஜித், எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைகிறது. மூன்றாவதாக இந்தக் கூட்டணி இணையும் படத்திற்கு தற்காலிகமாக 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

புனேவில் இதன் படப்படிப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களில் அது தள்ளிப்போகவே இப்போது படக்குழு பாங்காங்கில் சூட்டிங் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாங்காங்கில் மூன்றுவாரங்கள் வரை நடக்கும் சூட்டிங்கில் அஜித் ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில் பைக் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

பாங்காங்கில் நடக்கும் சூட்டிங் ஷெட்டியூலில் அஜித்குமார், மஞ்சுவாரியார், ஜான் கொக்கேன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. `ஏகே 61' படத்தின் மொத்தப்படப்பிடிப்புகளும் அக்டோபரிலேயே விறு, விறுவென சூட் செய்யப்பட்டு டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in