நான் நடிகனாக மாறியதற்கு காரணமே இதுதான்... மனம் திறந்த கெளதம் மேனன்!

கௌதம் மேனன்
கௌதம் மேனன்
Updated on
1 min read

அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தில் கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், தான் நடிகனாக மாறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து கெளதம் மேனன் பேசியுள்ளார்.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிகர்கள் விக்ரம், ரிது வர்மா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு இதன் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பாதியிலே நின்றது. ஒருவழியாக, தற்போது நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, கெளதம் வாசுதேவ் மேனனை டிடி பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில், ’துருவ நட்சத்திரம்’ படத்தை ரிலீஸ் செய்ய தான் மேற்கொண்ட பிரச்சினைகள் குறித்து கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார்.

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

அவர் பேசியிருப்பதாவது, “இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே, நான் மற்றப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். மற்றபடி, எனக்கு நடிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லை. மற்றப் படங்களில் நடித்து அதன்மூலம் கிடைத்த சம்பளத்தை இந்தப்படத்தின் வெளியீட்டிற்காகப் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால், நடிப்பதற்காக தான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்கவில்லை. வந்த வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். அதேசமயம், எனக்கு ஒத்துவராது என்று கருதிய சில நடிப்பு வாய்ப்புகளையும் நிராகரித்தேன்” என்று பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in