என் ஆறாம் அறிவை வளர்த்துக் கொண்டேன்... இயக்குநர் கெளதமின் வைரல் பதிவு!

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

'துருவ நட்சத்திரம்' படம் குறித்து கெளதம் மேனன் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ரிதுவர்மா ஆகியோர் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாக இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தது. தற்போது டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக வெளியாகாமல் நின்றது. படத்தை வெளியிடவே கெளதம் மேனன் பல படங்களில் நடித்ததாகவும் 'துருவ நட்சத்திரம்' தொடர்பான சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

படம் வெளியாவது குறித்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ' ‘துருவ நட்சத்திரம்’ படம் அறிவிக்கப்பட்டபோது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் 3 வருட அனுபவத்துடன் MNCல் வேலை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது? எனக் கேட்டிருக்க, இந்த ட்வீட்டிற்கு தற்போது கௌதம் வாசுதேவ் மேனனும் பதிலளித்திருக்கிறார்.

'துருவ நட்சத்திரம்’ படத்தில்...
'துருவ நட்சத்திரம்’ படத்தில்...

அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், 'அப்போதிருந்து இப்போது வரை நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறேன். அதன்பிறகு 3 படங்கள், 4 ஆந்தாலஜி குறும்படங்கள், 5 மியூசிக் வீடியோக்களை இயக்கி வெளியிட்டிருக்கிறேன். மேலும் என்னுடைய ஆறாவது அறிவையும் வளர்த்துக் கொண்டேன்' என கெளதம் மேனன் பதிவிட்டிருப்பதை ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in