ரஜினிகாந்தை இயக்க இருந்த கெளதம் மேனன்... ஜஸ்ட் மிஸ்ஸான வாய்ப்பு!

இயக்குநர் கெளதம் மேனன்
இயக்குநர் கெளதம் மேனன்

கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாக இருக்கும் நிலையில், படம் குறித்தான பல விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார் கெளதம் மேனன். அந்த வகையில், இந்தப் படத்தில் முதலில் நடிக்க யார் தேர்வானது என்பது குறித்துப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கெளதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடும் பணியில் பிஸியாக உள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதமே படம் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து இந்த மாதம் அதாவது நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம், சிம்ரன் என பலரும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும் இணையத்தில் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.

'துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம்
'துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம்

படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், படம் குறித்தான பல விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார் கெளதம் மேனன். அப்படி அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் விக்ரம் நடிப்பதற்கு முன்பு முதலில் ரஜினிகாந்த் மற்றும் சூர்யாவிற்குதான் இந்த கதை சொல்லி இருந்தேன் எனக் கூறி இருக்கிறார். ரஜினிகாந்தின் வயதிற்கேற்ப இந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்திருந்ததாகவும் ஆனால், அப்போது ‘கபாலி’ படத்தில் ரஜினி கமிட் ஆகி இருந்ததால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டியிருந்ததாலும் நடிக்க முடியாமல் போனது எனக் கூறி இருக்கிறார்.

மேலும் நடிகர் சூர்யாவும் தேதி பிரச்சினைக் காரணமாக இந்தப் படத்தில் இருந்து அவர் ஒதுங்கினார். அதன் பிறகு, விக்ரமிடம் இந்தக் கதை போயிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in