தன்னைப்பற்றி `லவ் டுடே’ படத்தில் கேலி: என்ன சொல்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்?

தன்னைப்பற்றி `லவ் டுடே’ படத்தில் கேலி: என்ன சொல்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்?

‘லவ் டுடே’ படத்தில் தன்னைப் பற்றி கேலி செய்திருந்தது குறித்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் இவானா, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியானத் திரைப்படம் ‘லவ் டுடே’. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் படத்தைத் தயாரித்து இருந்தது. படம் 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. படத்தின் ஒரு காட்சியில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் போல நடித்துக் காட்டி கேலி செய்திருப்பார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தன்னை ‘லவ் டுடே’ படத்தில் கேலி செய்திருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு மனம் திறந்துள்ளார். ”சிறிய பட்ஜெட்டில் உருவாகி இந்த வருடம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்ற படங்களில் ‘லவ் டுடே’ முக்கியமானது. அந்தப் படத்தில் என்னைப் போல் நடித்து கேலி செய்திருப்பார்கள். என்னைக் கேட்டிருந்தால் நானே அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருப்பேன். பரவாயில்லை. பல பெரிய படங்களுக்கு மத்தியில் சின்ன பட்ஜெட் படமான 'லவ் டுடே' வெளியாகி வெற்றிப் பெற்றது வரவேற்க வேண்டிய விஷயம்’ எனவும் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in