நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்!

நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர் விஜய்யுடன் ‘தளபதி67’ ல் நடிக்க இருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. படம் தொடர்பான வெளியான பேட்டி ஒன்றில் தனக்கு ‘விக்ரம்’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு குறித்து இயக்குநர் கெளதம் மேனன் மனம் திறந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, ‘’விக்ரம்’ பட சமயத்தின் போதே எனக்கு நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்கு லோகேஷ் கனகராஜிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், அந்த சமயத்தில் ஏற்கனவே இருந்த பட வேலைகள் காரணமாக என்னால் அதில் நடிக்க முடியவில்லை.

பிறகு மீண்டும் ‘தளபதி 67’ படத்திற்காக லோகேஷ்ஷிடம் இருந்து அழைப்பு வந்தது. இந்த முறை மறுக்க முடியவில்லை, ஒத்துக்கொண்டேன்’ என கெளதம் மேனன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

‘தளபதி 67’ படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் பிஸியாக உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக திட்டமிட்டிருக்கும் இதில் நடிக்க சமந்தா, த்ரிஷா, அர்ஜூன் சார்ஜா, சஞ்சய் தத், ப்ரித்விராஜ் சுகுமாறன் உள்ளிட்ட பலரிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படம் குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-ல் கெளதம் மேனன் நடிகர் விஜய்யை இயக்குவதாக இருந்தது. இதற்கான ஃபோட்டோஷூட்டும் அப்போது நடத்தப்பட்டது. பின்பு படம் நடக்காமல் போனது. இப்போது பத்து வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யுடன் கெளதம் மேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் கெளதம் இயக்கத்தில் எப்போது விஜய் நடிப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in