விஜய்க்கு வில்லனாக கெளதம் மேனன்?

விஜய்க்கு வில்லனாக கெளதம் மேனன்?

நடிகர் விஜய்க்கு இயக்குநர் கெளதம் மேனன் வில்லனாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குநர் வம்சியுடன் இணைந்திருக்கும் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை முடித்து விட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் தனது 67-வது படத்திற்காக இணைய இருக்கிறார். தற்போது இதற்கானத் திரைக்கதை எழுதும் பணியில் இருக்கிறார் லோகேஷ். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் வில்லியாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாணியிலான கேங்க்ஸ்டர் கதையாக இது இருக்க வாய்ப்பு அதிகம். இதில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவருடன் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளார்.

நடிகராக இதற்கு முன்பு கெளதம் மேனன் பல படங்களில் நடித்திருந்தாலும், ‘தளபதி 67’-ல் மாறுபட்ட வில்லனாக இதற்கு முன்பு அவரைப் பார்த்திராத வகையில் இருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. கெளதம் மேனன், சஞ்சய் தத் மட்டுமில்லாமல் படத்தில் பலருக்கும் க்ரே ஷேட் இருக்கும்படியாகவே கதாபாத்திரம் வடிவமைக்கப்பட உள்ளது.

பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ ஆக கமல், சூர்யா, விஜய் என இவர்களை இணைக்கும்படி கதை அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அடுத்த வருடம் தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் நவம்பரில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in